Wednesday, July 9, 2008

படித்ததில் பிடித்தது ....

அந்தக் கோயிலில்

நீ கண்மூடி நின்றபோது

பார்த்தேன்

கர்ப்பகிரகத்திலிருந்து எழுந்துவந்த கடவுள்

உன்னை மண்டியிட்டு

வணங்கியதை....


*******************************

அவளைப்

பார்த்ததற்கு முந்தைய

நாட்களை நான்

நினைத்துப் பார்க்கிறேன்

அப்போது நான்

பிரச்சனையின்றி இருந்தேன்.

*******************************

சில பூக்கள் அவள் மேல் விழுந்தன..

சில பூக்கள் என் மேல் விழுந்தன....

ஒரு சிறு வித்தியாசம் தான்....

நான் கல்லறையில்... அவள் மணவறையில்....

*******************************

மாலையில் மரணம் மரணம்...

என்று தெரிந்தும் கூட...

கண்ணீர் விடுவது இல்லை பூக்கள்..

என்னை போல....

*******************************

என் உதடுகள்

உன் உதட்டோடு பேசிய பிறகு

பேச மறுக்கிறது...

உன்னோடு...!

*******************************

"நான் தான் கொடுப்பேன்" என்கிறாய்

இல்லை "நான் தான்" என்கிறேன் நான்

இருவருக்கும் சண்டை

எப்படி நடந்ததென்று தெரியவில்லை!

கொடுத்தாயிற்று.

"நான் தான் கொடுத்தேன்" என்கிறாய் நீ

இல்லை "நான் தான்" என்கிறேன் நான்

வேடிக்கைப் பார்க்கிறது

முத்தம்!

*******************************

உன்னைத் தேடித் தேடி

அலைந்த போது தேய்ந்த கால்கள்....

உன்னுடன் நடக்கும் போது

வளர்கிறது.....

*******************************

முட்களை தூவுங்கள்....
என் கல்லறை வரும் வழியெங்கும்

முட்களை தூவுங்கள்....

ருவேளை அவளின் கண்ணீர்பட்டு

என் காதல் உயிர்த்தெழலாம்

எனக்கு விருப்பமில்லை

மீண்டும் இறந்துவிட

மரித்தகாதல் மரித்ததாயிருக்கட்டும்....

*******************************

ஆண் பிள்ளை அழ கூடாதாம்
ஆண் பிள்ளை அழ கூடாதாம்

யாரோ காதல் அனுபவமே இல்லாத பைத்தியக்காரன் சொன்னது இது!

உனக்கான நினைவுகள் வரும்போதெல்லாம்

சில சமயம் ஒப்பாரி மாதிரி

சில சமயம் மௌனமாய்

அழுதுகொண்டு தானிருக்கிறேன்

யில் பாதையில்

நான்

ஓடி விழுந்தபோது உன்

கைக்குட்டையில் எச்சில் தடவி

ஒத்தடம் கொடுத்த நாள்….....

ரப்பானுக்கு பயந்து

கூரையில் ஏறி

தவறி விழுந்ததாய்

நீ கண்ட கனவை

நள்ளிரவில்

தொலைபேசியில் கூறி

என் கனவை கலைத்த நாள்…...

யாரோ ஒருவன்

வீதியில் இறந்துகிடக்க

அருகில் அவன் மனைவி

அழுவதைப்பார்த்து

என்னைக்கட்டிப்பிடித்து

எப்போதும் என்னுடன் இருப்பாயா

என ஏக்கத்துடன் கேட்ட நாள்…...

மாமாவுடன் பேசியபொழுது

இடையில் என்பெயரைக் கூறி

நீ தடுமாறித் தவித்ததை

அதே பயத்துடன்

மழலை மொழியில்

கூறிய நாள்…...

னக்கான நினைவுகள் வரும்போதெல்லாம்

சில சமயம் ஒப்பாரி மாதிரி

சில சமயம் மௌனமாய்

அழுதுகொண்டு தானிருக்கிறேன் ........!!

Tuesday, May 13, 2008

கொஞ்சூண்டு… பேசவேண்டும்

மறுபடியும் இறைவன் காலத்தை சுழற்றி நீ இறந்த நாளின் முந்தின நாளிலிருந்து.. எல்லாவற்றையும் அழித்திடமாட்டானா?


நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்

அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..
மனிதர்களே இல்லாத காடாய்..
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..
காட்சியளிக்கின்றது!

ஒருவனுக்கு
யாருமே இல்லையென்றால்..
அநாதை என்போம்!;
ஆனால்
எங்கள் எல்லோருக்கும்
நீ ஒருவன் இல்லையெனினும்..
நாங்கள் அநாதைதான்!

நீ இப்பொழுது
இறந்திருக்க கூடாதோ என்று தோன்றுகிறது!
காலம்சென்று நீ இறந்தாலும்
அப்போதும்
இப்படித்தான் நினைத்திருப்பேன்!

இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன்
நீ இறக்கவில்லை
எங்கோ ஓர் இடத்தில்
நீண்ட தூக்கம்…
தூங்கிகொண்டிருக்கின்றாய் !!


நீ அமர்ந்த இருக்கை..
நடந்து வந்த பாதை..
நீ ஓட்டிய வாகனம்..
இவைகள் நீ பூமியில் உலவியதை..
எனக்குள் மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது!

மறுபடியும் நீ விழித்துப்பார்க்கும்பொழுது
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்..

நீ
உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்